Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Sunday, January 26, 2020

தியானம்

தியானம்


ஒரு சமயம் பவுத்த மடாலயத்தில் துறவியொருவர் தம் சீடர்களுடன் தியானத்திலிருந்தார்கள்.திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. சிஷ்யர்கள் உடனே வெளியில் ஓடினார்கள். ஆனால், குரு மட்டும் இடத்தைவிட்டு அசையாமல் தியானத்தில் மூழ்கியிருந்தார்.

 சில வினாடிகளில் பூகம்பம் நின்றது. சிஷ்யர்கள் மடத்தில் உள்ளே வந்து, அமைதியாக அமர்ந்திருந்த குருவைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்,குருவின் தியானம் கலைந்தபோது பூகம்பம் வந்தபோது தாங்கள் ஏன் ஓடவில்லை? என்று வினவினார்கள். 

நானும் ஓடினேனே! என்றார் குரு. சீடர்கள் புரியாமல் விழித்தனர். குரு சொன்னார்: நீங்கள் பூகம்பத்தில் மடாலயம் விழுந்து விடலாம். என்று அஞ்சி வெளியில் ஓடினீர்கள். நானோ என்றிருந்தாலும் உடல் விழுந்துவிடும் இந்த உடலை இயற்கை என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் என்று உடலை இங்கேயே விட்டுவிட்டு,உடலைவிட்டு வெளியே ஓடினேன்.

பூகம்பத்தில் உடல் அழியவில்லை. எனவே மீண்டும் உடலுக்குள் வந்துவிட்டேன் என்றார்

தியானம் என்பது உடலைவிட்டுவிடுவது என்பது அப்போதுதான் சீடர்களுக்கு புரிந்தது

காளியைப் பார்க்க வேண்டும். காட்ட முடியுமா?|Paramahamsar

காளியைப் பார்க்க வேண்டும்


பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் தக்ஷிணேஸ்வரத்தில் காளி கோயில் பூசாரியாகப் பணி செய்து கொண்டிருந்தார்.

 ஒரு நாள் பக்தர் ஒருவர் அவரிடம், நீங்கள் காளி மாதாவைப் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டார். அதற்குத் தாம் காளி மாதாவைப் பார்த்திருப்பதாகச் சொன்னார் சுவாமிகள். 

அவளுடன் பேசியிருக்கிறீர்களா? எனக் கேட்டார் பக்தர். 

இன்று காலை கூடப் பேசினேனே என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர். 

உடனே அந்த பக்தர், எனக்கும் காளியைப் பார்க்க வேண்டும். காட்ட முடியுமா? எனக் கேட்டார். 

நீங்கள் என்ன உத்தியோகம் பார்க்கிறீர்கள்? எனக் கேட்டார் பகவான். 

பக்தர், நான் ஒரு மருத்துவர் என்றார்.

அப்படியானால் என்னையும் மருத்துவராக்கி விடுங்கள் என்றார் பகவான். 

 அதெப்படி சாத்தியம்? மருத்துவராவதற்கு அதற்குரிய பாடத்திட்டங்களைப் படிக்க வேண்டும் பரிசோதனைகள், பயிற்சிகள்... இன்னும் பலப்பல.... அதற்கெல்லாம் பல ஆண்டுகள் பிடிக்கும். அதன் பிறகும் தொழில் அனுபவம் பெற்றால்தான் முழு வைத்தியராக முடியும் என்று விளக்கினார் பக்தர். 

 இங்கேயும் அதேதான். கடவுளைக் காணப் பலகாலம் - பல பிறவிகள்கூட ஆகலாம். கடினமான சாதனைகள் செய்ய வேண்டும் என்று தெளிவுபடுத்தினார் ஸ்ரீராமகிருஷ்ணர்

கல்பொம்மையாக இருக்காதே|Story

கல்பொம்மையாக இருக்காதே


சீடன் ஒருவன் குருவிடம் இந்த கேள்வியைக்கேட்டான். 

குருவே! ஞானி,பக்தன்,சாதாரண மனிதன் இந்த மூன்றுபேரின் நிலையையும் உவமானத்துடன் விளக்க முடியுமா?

குரு, சர்க்கரைப் பொம்மை, துணி பொம்மை மற்றும் கல் பொம்மை மூன்றையும் கொண்டுவரச் சொன்னார்.

அந்த மூன்றையும் தண்ணீரில் மூழ்கடித்தார்

சர்க்கரைப் பொம்மை நீரில் முற்றிலும் கரைந்து போனது. துணி பொம்மை நீர் முழுவதையும் உறிஞ்சியது.பார்ப்பதற்கு பொம்மை போல தெரிந்தாலும் அது முழுவதும் நீரால் நிறைந்திருந்தது. கல்பொம்மை முன்புபோலவே இருந்தது.

குரு இப்போது விளக்கினார். ஞானிகள் இறைஞானம் பெறும்போது சர்க்கரைபொம்மை எப்படி முழுவதும் கரைந்துவிட்டதோ அதேபோல அவன் இறைவனில் ஒன்றி விடுகிறான். தான் என்ற நினைவை அறவே இழந்து விடுகிறான். 

துணி பொம்மை நீரை உறிஞ்சிக் கொண்டு முழுவதும் ஈரமாகி விடுகிறது. ஆனால் தன் வடிவை இழப்பதில்லை. அதேபோல் பக்தன் தானாகவே இருந்துக்கொண்டு இறைவன் நினைவில் ஊறியிருக்கிறான். அவன் செய்யும் ஒவ்வொரு செயலும் கடவுளுக்கே அர்ப்பிக்கிறான்.

உலக வாழ்க்கையில் திளைத்திருப்பவன் கல் பொம்மை போன்றவன் கல், நீரை உறிஞ்சாததுபோல் இவனும் இறைஞானம் தன் உள்ளத்தில் நுழையவே அனுமதிப்பதில்லை.

நீ கல்பொம்மையாக இருக்காதே என்று குரு சீடனுக்கு உபதேசித்தார்

ഞാൻ സന്ദർശകൻ മാത്രം -sufi story

ഒരു ടൂറിസ്റ്റ് ഒരു സൂഫിയുടെ വീട് സന്ദർ ശിച്ചു . സൂഫിയുടെ വീട്   കണ്ട് അയാൾ അത്ഭുതപ്പെ ട്ടു വീട് ഒരു ലളിതമായ മുറിയായിരുന്...