கல்பொம்மையாக இருக்காதே
குருவே! ஞானி,பக்தன்,சாதாரண மனிதன் இந்த மூன்றுபேரின் நிலையையும் உவமானத்துடன் விளக்க முடியுமா?
குரு, சர்க்கரைப் பொம்மை, துணி பொம்மை மற்றும் கல் பொம்மை மூன்றையும் கொண்டுவரச் சொன்னார்.
அந்த மூன்றையும் தண்ணீரில் மூழ்கடித்தார்
சர்க்கரைப் பொம்மை நீரில் முற்றிலும் கரைந்து போனது. துணி பொம்மை நீர் முழுவதையும் உறிஞ்சியது.பார்ப்பதற்கு பொம்மை போல தெரிந்தாலும் அது முழுவதும் நீரால் நிறைந்திருந்தது. கல்பொம்மை முன்புபோலவே இருந்தது.
குரு இப்போது விளக்கினார். ஞானிகள் இறைஞானம் பெறும்போது சர்க்கரைபொம்மை எப்படி முழுவதும் கரைந்துவிட்டதோ அதேபோல அவன் இறைவனில் ஒன்றி விடுகிறான். தான் என்ற நினைவை அறவே இழந்து விடுகிறான்.
துணி பொம்மை நீரை உறிஞ்சிக் கொண்டு முழுவதும் ஈரமாகி விடுகிறது. ஆனால் தன் வடிவை இழப்பதில்லை. அதேபோல் பக்தன் தானாகவே இருந்துக்கொண்டு இறைவன் நினைவில் ஊறியிருக்கிறான். அவன் செய்யும் ஒவ்வொரு செயலும் கடவுளுக்கே அர்ப்பிக்கிறான்.
உலக வாழ்க்கையில் திளைத்திருப்பவன் கல் பொம்மை போன்றவன் கல், நீரை உறிஞ்சாததுபோல் இவனும் இறைஞானம் தன் உள்ளத்தில் நுழையவே அனுமதிப்பதில்லை.
நீ கல்பொம்மையாக இருக்காதே என்று குரு சீடனுக்கு உபதேசித்தார்
No comments:
Post a Comment