காளியைப் பார்க்க வேண்டும்
ஒரு நாள் பக்தர் ஒருவர் அவரிடம், நீங்கள் காளி மாதாவைப் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டார். அதற்குத் தாம் காளி மாதாவைப் பார்த்திருப்பதாகச் சொன்னார் சுவாமிகள்.
அவளுடன் பேசியிருக்கிறீர்களா? எனக் கேட்டார் பக்தர்.
இன்று காலை கூடப் பேசினேனே என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர்.
உடனே அந்த பக்தர், எனக்கும் காளியைப் பார்க்க வேண்டும். காட்ட முடியுமா? எனக் கேட்டார்.
நீங்கள் என்ன உத்தியோகம் பார்க்கிறீர்கள்? எனக் கேட்டார் பகவான்.
பக்தர், நான் ஒரு மருத்துவர் என்றார்.
அப்படியானால் என்னையும் மருத்துவராக்கி விடுங்கள் என்றார் பகவான்.
அதெப்படி சாத்தியம்? மருத்துவராவதற்கு அதற்குரிய பாடத்திட்டங்களைப் படிக்க வேண்டும் பரிசோதனைகள், பயிற்சிகள்... இன்னும் பலப்பல.... அதற்கெல்லாம் பல ஆண்டுகள் பிடிக்கும். அதன் பிறகும் தொழில் அனுபவம் பெற்றால்தான் முழு வைத்தியராக முடியும் என்று விளக்கினார் பக்தர்.
இங்கேயும் அதேதான். கடவுளைக் காணப் பலகாலம் - பல பிறவிகள்கூட ஆகலாம். கடினமான சாதனைகள் செய்ய வேண்டும் என்று தெளிவுபடுத்தினார் ஸ்ரீராமகிருஷ்ணர்
No comments:
Post a Comment